பங்களாதேஸ் டெஸ்ட் அணித்தலைவராக சகீப் அல் ஹசன்

பங்களாதேஸ் அணித்தலைவராக செயற்பட்டுவந்த முஷ்பிகுர் ரஹிம் மற்றும் உதவி அணித்தலைவராக செயற்பட்டுவந்த தமிம் இக்பால் ஆகியோர் நீக்கப்பட்டு புதிய டெஸ்ட் அணித்தலைவராக சகிப் அல் கசன் மற்றும் உதவி அணித்தலைவராக மகமடுல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கைக்கெதிரான தொடரின் போது புதிய அணித்தலைவரின் கீழ் பங்களாதேஸ் அணி களமிறங்கவுள்ளது.
புதிய அணித்தலைமை தொடர்பாக பங்களாதேஸ் கிரிக்கட் வாரிய தலைவரான நஸ்முல் ஹாசன் கருத்து தெரிவிக்கும் போது; இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக சகிப் அல் கசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார், எனினும் இவர் தொடர்ச்சியாக அணித்தலைவராக செயற்படுவாரா என்பதை உறுதிப்பட கூற முடியாது, மேலும் அணித்தலைவரது மாற்றம் தொடர்பாக உறுதியான கருத்துக்களை தெரிவிக்க முடியாது, எனவும், முஷ்பிகுர் ரஹிம் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த வைக்கவும், அணித்தலைவர் என்கின்ற அழுத்தத்தை அவர் மீது பிரயோக்கிக்காது தடுக்கவுமே புதிய அணித்தலைவர் நியமிக்கப்பட்டார் என்பது சுட்டிக்க்காட்டத்தக்கது. என குறிப்பிட்டார்.
முஷ்பிகுர் ரஹிம் தலைமையில் 34 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளையும், 18 தோல்விகளையும், 9 சமனிலை முடிவையும் அணி பெற்றுக்கொண்டது.
முஷ்பிகுர் ரஹிம் தலைமையில் கடந்த பருவகால தொடரில் சிறப்பான பெறுதிகள் கிடைக்கப்பெற்றன. குறிப்பாக நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையான போட்டியில் தோவியைத்தழுவினாலும், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடான தொடரை சமனிலைப்படுத்தியது விசேட அம்சமாகும். இவ்வருடத்தில் முஷ்பிகுர் ரஹிம் தலைமையில் 9 போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்துள்ள அதேவேளை தென்னாபிரிக்காவுடனான தொடரின்போது மிகவும் மோசமான இனிங்ஸ் தோல்வியை தழுவியது, இதன் போது அணித்தலைவராக செயற்பட்டு வந்த முஷ்பிகுர் ரஹிமின் அணித்தலைமை கிரிக்கட் விமர்சகர்களால் பெரிதும் பேசப்பட்டது..
எதுஎவ்வாறாயினும் புதிய அணித்தலைமையின் கீழ் பங்களாதேஸ் அணி பயணிக்கவுள்ளது.
Related posts:
|
|