பங்களாதேஸ் செல்லும் இலங்கை அணி – போட்டி அட்டவணை!

பங்களாதேஷில் வரும் வருடத்தில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி பங்களாதேஸிற்கு பயணமாகின்றது. சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் இணைந்து இலங்கை அணியும் முக்கோண தொடரில் விளையாடவுள்ளது.
பங்களாதேஷ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடவுள்ள அதே வேளை 15ம் திகதி முத்தரப்புத்தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகின்றது, இதன் பின்னர் இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ரீ20 போட்டிகளில் பங்குகொள்ளவுள்ளது,
இதேவேளை முத்தரப்பு தொடரில் போட்டியிடும் இலங்கை அணி ஒவ்வொரு அணியுடனும், இரண்டு தடவைகள் போட்டியிடவுள்ளது. இந்த முத்தரப்பு போட்டித் தொடர் ஜனவரி 15ம் திகதி ஆரம்பமாகுவதோடு, இலங்கை அணி தனது முதல் போட்டியை சிம்பாவே அணிக்கெதிராக விளையாடவுள்ளது. இப்போட்டி 17ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டி ஜனவரி 27ம் திகதி டாக்காவில் நடைபெறவுள்ளது. முத்தரப்பு தொடரின் போட்டிகள் அனைத்தும் டாக்காவில் நடைபெறவுள்ளது. அனைத்து போட்டிகளும் இரவு நேரப்போட்டிகளாக இந்த முத்தரப்புத்தொடரில் அமையவுள்ளது.
முக்கோணத்தொடரை அடுத்து நடைபெறவுள்ள இலங்கை ௲ பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சிட்டக்கொங்கிலும், இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி சில்லெட்டிலும் நடைபெறவுள்ளதுடன், ஏனைய டெஸ்ட் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகள் டாக்காவில் நடைபெறவுள்ளன. மொத்தமாக மூன்று மைதானங்களில் இலங்கை ௲ பங்களாதேஸ் அணிகள் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|