பங்களாதேஸ் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணி பங்கேற்பது உறுதி!

Friday, August 26th, 2016

 


இங்கிலாந்து அணி பங்களாதேஸிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்வது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இங்கிலாந்து அணி பங்களாதேஸிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.


பாதுகாப்பு பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் இங்கிலாந்து அணி பங்களாதேஸிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக பங்களாதேஸில் இடம்பெற்றும் வரும் தாக்குதல்கள் காரணமாக இங்கிலாந்து அணி போட்டித் தொடரில் பங்கேற்குமா என்ற சந்தேகம் நிலவி வந்தது.


எனினும் திட்டமிட்டவாறு குறித்த சுற்றுப் பயணம் இடம்பெறும் என இங்கிலாந்து கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்து பங்களாதேஸ் அணியுடன் விளையாட உள்ளது.

Related posts: