பங்களாதேஷ் வீரர் அரபாட் சன்னி கைது!

Tuesday, January 24th, 2017

காதலியின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான அரபாட் சன்னி மீது 2 வாரத்திற்கு முன் அவரது காதலி பொலிஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அதில், அரபாட் சன்னி பேஸ்புக்கில் தன்னுடைய பெயரில் போலி கணக்கு திறந்து அதில் தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரபாட் சன்னி வீட்டில் அதிரடி சோதனை நடத்திய பொலிஸார், அவரை கைது செய்துள்ளனர். இது குறித்து பொலிஸார் கூறுகையில், அரபாட்டை கைது செய்துள்ளோம், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அரபாட் சன்னி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை அல்லது 1,26,000 டொலர் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

coltkn-01-24-fr-03150754104_5175543_23012017_MSS_CMY

Related posts: