பங்களாதேஷ் தொடரில் இருந்து தனஞ்சய விலகல்!

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா உபாதை காரணமாக பங்களாதேஷ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
பங்களாதேஷில் நடைபெற உள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணி பங்கேற்க உள்ளது.இதற்கான வீரர்கள் பட்டியலில் காயம் காரணமாக ஏஞ்சலோ மேத்யூஸ் விலகியுள்ள நிலையில் மற்றொரு துடுப்பாட்ட வீரரான தனஞ்சய டி சில்வாவும் விலகியுள்ளார்.
கோட்லாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, தனஞ்சய 119 ஓட்டங்களில் ஆடிக் கொண்டிருந்தார், அப்போது ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.
மேலும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். எனினும் காயம் குணமாகாததால் அந்த தொடரிலும் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் பங்களாதேஷ் தொடரிலிருந்தும் விலகியுள்ள தனஞ்சய, சுற்றுப்பயணத்தின் இடையே உடல் நலம் தேறிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
Related posts:
|
|