பங்களாதேஷ் – அவுஸ்திரேலியா டெஸ்ட் சமநிலையில்!

Friday, September 8th, 2017

 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

போட்டியில் பங்களாதேஸ் அணி தமது முதலாவது இனிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 305 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களையும் பெற்றது.

இந்த நிலையில், தமது முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 377 ஓட்டங்களை பெற்றது. பின்னர், நான்காவது நாளான இன்று தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 3 விக்கட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது

முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதனூடாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

Related posts: