பங்களாதேஷ் அணி வெற்றி !

Sunday, September 22nd, 2019

பங்களதேஸில் இடம்பெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களதேஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.இந்த முத்தரப்பு இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதி போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

Related posts: