பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக சுனில் ஜோஷி!

Thursday, August 24th, 2017

பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக இந்திய அணியின் முன்னாள் இடது கைது சுழல்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கட் சபை இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.குறுகிய கால உடன்படிக்கையின் அடிப்படையிலலேயே அவர் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், பங்களாதேஷ் அணிக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக அவர் நேற்று டாக்கா சென்றுள்ளார்.

69 ஒருநாள் போட்டிகளில் 69 விக்கட்டுக்களும், 15 டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கட்டுக்களும் என மொத்தமாக 84 சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 120 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 6 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களையும், டெஸ்ட் போட்டிகளில் 142 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளமை சுனில் ஜோஷியின் சிறந்த பந்துவீச்சு பெறுபேறுகளாகும்.

Related posts: