பங்களாதேஷின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஹொட்னி வொல்ஷ் !

Saturday, September 3rd, 2016

பங்களாதேஷின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஹொட்னி வோல்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்காளாதேஷின் பயிற்சியாளராக இருந்த ஹீத் ஸ்ட்ரீக்கின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் ஒவ்வொரு பிரிவிற்கும் புதிய பயிற்சியாளர்கள் சேர்த்துக்கொள்ளபடவுள்ளனர்.

இதனையடுத்தே இலங்கையின் முன்னாள் வீரர் திலான் சமரவீரவையும் பங்களாதேஷ் கிரிக்கட் அணியின், துடுப்பாட்ட ஆலோசகராக இணைத்துகொள்ளப்பட்டார். அடுத்த மாதம் இங்கிலாந்து அணி பங்களாதேஷிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

இதனைதொடர்ந்து டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு எதிரான தொடர்களில் பங்களாதேஷ் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

walsh_2993531f

Related posts: