பங்களாதேஷின் தலைமை பயிற்றுவிப்பாளராகமீண்டும் ஹத்துருசிங்க !

Tuesday, June 21st, 2016

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும்  ஷந்திக ஹத்துருசிங்கவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்கவை தக்கவைத்துகொள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க  செயற்பட்டு வருவதோடு பங்களாதேஷ் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டிகளில் பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: