பகலிரவு டெஸ்ட் : வரலாற்றில் இடம்பிடித்த துமித் கருணாரட்ன!

i Friday, October 6th, 2017

பாகிஸ்தான. அணிக்கு எதிரான 2ஆவது பகலிரவு டெஸ்ட் போட்டியில்  துமித் கருணாரட்ன சதம் அடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக இடம்பெறுகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் நிலையில், சற்று முன்னர் வரை 3 விக்கட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் நிதானமாக விளையாடிவரும் துமித் கருணாரட்ன தனது 7வது சதத்தை சற்றுமுன் பூர்த்தி செய்தார்.துமித் கருணாரட்ன 130 ஓட்டங்களுடனும் , அணித்தலைவர் தினேஸ் சந்திமால் 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

இதன்மூலம் , இலங்கை அணியின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர் என்ற பெருமையை துமித் கருணாரட்ன பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது