நொதேன் வி.கழகம் நடத்தும் மென்பந்து சுற்றுப்போட்டிக்கு விண்ணப்பம் கோரல்!

Saturday, June 9th, 2018

கல்வியங்காடு நொதேன் விளையாட்டுக் கழகம் நடத்தும் மென்பந்து சுற்றுப்போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

அணிக்கு 7 பேர் ஓவர்கள் கொண்ட மே;றபடி மென்பந்து சுற்றுப்போட்டி எதிர்வரும் வாரம் ஆரம்பமாக உள்ளது.

போட்டிகள் அனைத்தும் நொதேன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறுவதுடன் போட்டிக்கான அனுமதிக்கட்டணம் ஆயிரம் ரூபாய் அறவிடப்படுவதுடன் ஒருவர் ஒரு கழகத்துக்கு மட்டுமே விளையாட முடியும்.

இப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் 2 ஆம் இடத்தினைப் பெறும் அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் பணமும் வெற்றிக் கிண்ணமும் 3 ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படும்.

மேற்படி போட்டிக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டுக் கழகங்கள் 0766526109, 0773454865, 0774308204 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: