நெய்மருக்கு எச்சரிக்கை!

Saturday, June 25th, 2016

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு ஸ்பெயின் கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரேசில் கால்பந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் நெய்மர் (23) புகழ்பெற்ற ஸ்பெயின் கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார்.

அந்த அணியில் நட்சத்திர வீரர்களான மெஸ்சி, சுவாரஸ் ஆகியோருடன் உடன் இணைந்து ஜொலித்து வருகிறார்.

கடந்த 2013ம் ஆண்டு பிரேசில் நாட்டின் கிளப் அணியான சாண்டோஸ் அணியிடம் இருந்து நெய்மரை ஸ்பெயின் பார்சிலோனா அணி வாங்கியது. தற்போது அவருக்கு வருடத்திற்கு 10.9 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் மற்றும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் ஆகிய அணிகள் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றன.

மான்செஸ்டர் அணி வருடத்திற்கு 13.5 மில்லியன் பவுண்டு சம்பளம் கொடுப்பதற்கும், பாரிஸ் ஜெயன்ட்-ஜெர்மைன் அணி 14.5 மில்லியன் பவுண்டுகள் சம்பளம் கொடுக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் நெய்மர் விடுவிப்பதற்கு விருப்பம் இல்லாத பார்சிலோனா அணி, அவரை வெளியேவிட 147 மில்லியன் பவுண்டு தொகையை நிர்ணயித்துள்ளது.

ரியல் மாட்ரிட், மான்செஸ்டர், பாரிஸ் ஜெயன்ட்-ஜெர்மைன் ஆகிய அணிகள் இவ்வளவு பணம் கொடுத்து நெய்மரை வாங்குமா? என்று தெரியவில்லை.

ஆனால், நெய்மர் மற்ற கிளப் அணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், தனது அணியுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் இல்லையென்றால் ஒப்பந்தம் திரும்ப பெறப்படும் என அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts: