நூற்றாண்டின் சிறந்த குத்துச்சண்டை போட்டி!

Wednesday, August 30th, 2017

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் மேவெதரும், மேக்கிரிகோருக்கும் இடையே நடந்த குத்துச்சண்டை போட்டி, பல வகையிலும் தனிச்சிறப்புகளைப் பெற்றிருக்கிறது.

இந்த குத்துச்சண்டை போட்டி உலக அரங்கில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட “நூற்றாண்டின் சிறந்த போட்டிகளுள் ஒன்று”. இப்போட்டியால் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு பல ஆயிரம் கோடிகள் குவிந்தன.

மட்டுமின்றி இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மேவெதருக்கு 300 மில்லியன் டொலர் அளவுக்கு பரிசு அளிக்கப்பட்டது.மேலும் இப்போட்டியை முன்னிட்டு பல மில்லியன் டொலர் வரை சூதாட்டம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.டிக்கெட் விற்பனையிலும் சாதனை படைத்துள்ள இப்போட்டி, நேரலை ஒளிபரப்பிலும் மில்லியன் கணக்கில் லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: