நீக்கப்பட்டார் தவான்!

Wednesday, September 27th, 2017

அவுஸ்ரேலிய அணியுடனான அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்காக இந்திய அணியில் ஷிகர் தவான் (Shikhar Dhawan) இணைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்ரேலிய அணியுடனான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி தற்போதைய நிலையில் மூன்றுக்கு பூச்சியம் என்ற வகையில் கைப்பற்றியுள்ளது.

இந்தநிலையில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்காக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

அவர் அவுஸ்திரேலிய அணியுடனான முதல் மூன்று போட்டிகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருந்தார்.

இதனிடையே உபாதைக்கு உள்ளாகியிருந்த அக்ஸர் பட்டேல் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

உபாதையால் அவர் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா 15 பேர் கொண்ட குழாமில் இணைக்கப்பட்டிருந்தார்.

எனினும் தற்போது, ஜடேஜா நீக்கப்பட்டு பட்டேல் மீண்டும் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலிய அணியுடனான இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய குழாமில் அணித் தலைவர். Virat Kohli உடன் Rohit Sharma, KL Rahul, Manish Pandey, Kedar Jadhav, Ajinkya Rahane, MS Dhoni (wk), Hardik Pandya, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Umesh Yadav, Mohammed Shami, மற்றும் Axar Patelஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்

Related posts: