நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம் – மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை அணி!
Wednesday, September 18th, 2024இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
காலியில் நடைபெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்படி இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்தள்ளது.
இதேவேளை காலியில் இன்று ஆரம்பமான நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்ட வரிசையில் பல மாற்றங்களை, அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்ய உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி கமிந்து மெண்டிஸ், ஐந்தாவது இடத்திற்கு முன்னோக்கி நகர்த்தப்படுகிறார் அனுபவம் மற்றும் பன்முகத் திறமைக் கொண்ட தினேஸ் சந்திமால், மூன்றாவது இடத்தில் துடுப்பாடுகின்றார்.
குசல் மெண்டிஸ் ஏழாவது இடத்தில் துடுப்பெடுத்தாடி, விக்கெட் காப்பாளராகவும் செயற்படுவார். பந்துவீச்சைப் பொறுத்தவரை, ரமேஸ் மெண்டிஸ் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக அணியில் இணைகிறார்
இந்தப் போட்டியில் அசித பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகிய இருவரும் வேகப்பந்து வீச்சாளர்களாக களமிறங்கவுள்ளனர்.
இந்தநிலையில் அறிவிக்கப்பட்ட அணியில் திமுத் கருணாரத்ன, பத்தும் நிஸ்ஸங்க, தினேஸ் சந்திமல், ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா(தலைவர்), குசல் மெண்டிஸ், ரமேஸ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
000
Related posts:
|
|