நியூஸிலாந்திற்கெதிரான பாக்கிஸ்தான் அணி விபரம்!

Monday, December 25th, 2017

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் வருகின்ற வருடத்தில் முதற்பாதியில் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 6ம் திகதி போட்டித்தொடர் ஆரம்பமாகவுள்ளது. 5 ஒருநாள் போட்டிகளும், 3 இருபதுக்கு 20 போட்டிகளிலும் பாகிஸ்தான் ,நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

நடப்பு ஆண்டில் பலம் பொருந்திய அணிகளாக இவ்விரு அணிகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய அம்சமாகும்.

அணிவிபரம்.சப்ராஸ் அஹமத் (தலைவர்) (wk), அசார் அலி, பஹார் ஷாமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், ஹாரிஸ் சொஹைல், பாஹீம் அஷ்ரப், ஷதாப் கான், மொஹம்மட் நவாஸ், மொஹம்மட் ஆமிர், ஹசன் அலி, ஆமீர் யாமின்,ருமான் ரயீஸ்,சோயிப் மாலிக், மொஹம்மட் ஹாபீஸ் பந்து வீசத் தடைக்குள்ளான ஹாபிஸ் இந்த அணியில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளார்.

Related posts: