நியூசிலாந்து 434 ஓட்டங்கள் வெற்றிக்கு இலக்கு!

Sunday, September 25th, 2016

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 377 ஓட்டங்களுடன் ஆட்டத்தை டிக்ளேர் செய்த நிலையில் 434 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது.

இந்திய அணி தனது 500வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்துக்கு எதிராக கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் விளையாடி வருகிறது .

இந்நிலையில், இந்திய அணி இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 318 ஓட்டங்களை குவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் 262 ஓட்டங்கள் பெற்றிருந்தது.

இப்போட்டியில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிரடியாக பந்து வீசிய நிலையில், ஜடேஜா 5 விக்கெட்டையும், அஸ்வின் 4 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, 56 ஓட்டங்கள் முன்னிலையில் 2 வது மற்றும் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 159 ஓட்டங்கள் பெற்றிருந்தது.

இந்த ஆட்டத்தில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் 64 ஓட்டங்களும், புஜாரா 50 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், 4 வது நாள் ஆட்டமான இன்று முரளி விஜய் (76 ஓட்டங்கள்) , கோஹ்லியும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் சிறப்பாக ஆடி அணியின் ஓட்ட விகிதத்தை அதிகரித்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 377 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் டெஸ்டை கைப்பற்ற 434 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

_91373637_150766558

Related posts: