நியூசிலாந்து தோல்வி குறித்து கருத்து வெளியிட்டுள்ள நியூசிலாந்து பிரதமர்!

Tuesday, July 16th, 2019

லண்டன் ஒவலில் நடைபெற்ற இங்கிலாந்து-நியூசிலாந்து இறுதி உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தமை குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆடேர்ன் நகைச்சுவையாக கருத்தினை வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் பரபரப்பான இறுதி வேளையில் அவர்கள் செயல்பட்டமை பாராட்டப்பட வேண்டிய விடயம் என அவர் நியூசிலாந்து வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பலர் நியூசிலாந்து அணி, தமது கறுப்பு வர்ண தொப்பியை இழந்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர், எமது அணியினர் கறுப்பு வர்ண தொப்பியை இழந்துள்ள போதிலும், எமது இதயங்களை கவர்ந்துள்ளதுடன் நம்பமுடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நிறைவடைந்த உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் முதன் முறையாக வெற்றி கிண்ணத்தை இங்கிலாந்து சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட வேண்டிய இடத்தில், ஆறு ஓட்டங்கள் வழங்கப்பட்டமை நடுவர்களின் தவறு என்று, முன்னாள் நடுவர் சைமன் டௌஃபல் தெரிவித்துள்ளார்.

களத்தடுப்பாளரால் வீசப்பட்ட பந்து பென்ஸ்டோக்ஸின் மட்டையில் பட்டு, எல்லைக்கோட்டை தாண்டியதை அடுத்து ஆறு ஓட்டங்கள் வழங்கப்பட்டன.

ஆனால் விதிகளின் படி ஐந்து ஓட்டங்களே வழங்கப்பட வேண்டும் என்றும், இது நடுவர்களின் பிழை என்றும் சைமன் டௌஃபல் தெரிவித்துள்ளார்.

Related posts: