நியூசிலாந்து தொடர்: இந்திய அணி அறிவிப்பு..!

Monday, January 13th, 2020


இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளை கொண்ட 20க்கு 20 போட்டித்தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, இந்த போட்டித்தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய குழாமில் ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ரா, யுஸ்வேன்ர சஹால், ஷிகர் தவான், ஷிவம் டுபே, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, மனிஷ் பாண்டி, ரிஷப் பான்ட், கே.எல், ராகுல், நவீப் சாய்னி, சர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை, அண்மையில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரை இந்திய அணி 2 க்கு 0 என்ற அடிப்படையில் வெற்றிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: