நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு – பங்களாதேஷ் அணி வீரர்கள் மயிரிழையில் தப்பிப்பிழைப்பு!

Friday, March 15th, 2019

நியூசிலாந்தின் இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பங்களாதேஷ் அணியினரும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நியூசிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள போட்டித் தொடரில் கலந்து கொள்ளவே பங்களாதேஷ் அணியானது நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நிகழும் போது பங்களாதேஷ் அணியானது காலை வணக்கத்தினை பூர்த்தி செய்து பள்ளிக்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்துள்ள நிலையில் அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக தப்பிச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: