நியூசிலாந்து தாக்குதல் – போட்டி ரத்து தொடர்பில் ஐசிசி அறிக்கை!

Saturday, March 16th, 2019

நியூசிலாந்து க்றிஸ்சேர்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிய குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்வதாக குறித்த சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் ரிச்சர்ட்சன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறவிருந்த நியூசிலாந்து – பங்களாதேஷ் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இரத்து செய்யும் தீர்மானத்திற்கு ஐசிசி முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: