நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான நீல் வேக்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

Tuesday, February 27th, 2024

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான நீல் வேக்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வேக்னர் உள்வாங்கப்பட மாட்டார் என நியூசிலாந்து தேர்வாளர்கள் கூறியதை அடுத்து அவர் இவ்வாறு ஓய்வினை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கண்ணீருடன் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள நீல் வேக்னர் 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் நீல் வேக்னர் ஐந்தாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: