நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடர் – இலங்கைக்கு அதிக வெற்றி வாய்ப்பு!
Monday, September 23rd, 2024சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 1ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம் பெறவுள்ளது.
காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில், தமது 1ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 340 ஓட்டங்களைப் பெற்றது.
இந்த நிலையில், தமது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 309 ஓட்டங்களை பெற்று 275 ஓட்டங்களை நியூஸிலாந்து அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கித் தமது 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி நேற்றைய 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில், போட்டியின் இறுதி நாளான இன்றைய தினத்தில், வெற்றி பெறுவதற்கு நியூஸிலாந்து அணி 68 ஓட்டங்களைப் பெற வேண்டும்.
000
Related posts:
|
|