நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – அஞ்சலோ மத்யூஸ் குசல் மெண்டிஸ் சதம்!
Tuesday, December 18th, 2018இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
குறித்த போட்டியில், முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 282 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பாக கருணாரத்ன 79 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 83 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 578 ஓட்டங்களைப் பெற்று 296 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி சற்று முன்னர் வரை 03 விக்கட் இழப்பிற்கு 243 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை சார்பாக குசல் மெண்டிஸ் 111 ஓட்டங்களைப் பெற்று டெஸ்ட் போட்டிகளில் தனது 06 ஆவது சத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதேவேளை அஞ்சலோ மத்யூஸ் 108 ஓட்டங்களைப் பெற்று டெஸ்ட் போட்டிகளில் தனது 09 வது சத்தைப் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அன்டி முர்ரே மீண்டும் முதலிடம்!
இனிங்ஸ் வெற்றியை இரண்டே நாளில் சுவைத்த தென்னாபிரிக்கா
கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை செய்த ஆப்கான் வீரர்!
|
|