நாம் தகுதியற்றவர்கள் – மேத்யூஸ் வேதனை

Tuesday, March 29th, 2016

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு செல்ல இலங்கை அணிக்கு தகுதியில்லை என்று மேத்யூஸ் வேதனையாக தெரிவித்துள்ளார்.

நடப்பு சாம்பியனாக டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் களமிறங்கிய இலங்கை, இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 10 ஓட்டங்களால் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

நேற்று(28) நடந்த தென் ஆப்பிரிக்கவுக்கு எதிராக போட்டியிலும் இலங்கை தோல்வியைத் தழுவியது. லீக் சுற்றில் 4 போட்டியில் விளையாடி 1ல் மட்டுமே வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் இந்த தொடர் தோல்விகள் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரையிறுதிக்கு செல்ல தகுதியான அணி கிடையாது என்று அணித்தலைவர் மேத்யூஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “தற்போது அணியில் அனுபவ வீரர்கள் கிடையாது தான், ஆனால் அதை காரணமாக கூறுவது சரியானது அல்ல.

இது உலகக்கிண்ண தொடர். இங்கு அனைவரும் சிறப்பாக செயல்பட்டு தான் ஆகவேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் இழந்தோம். இதைத் தவிர இழக்க ஒன்றுமில்லை என்றாகிவிட்டது.

அந்தப் போட்டியில் சிறப்பாக முன்னேறிய நிலையிலும் என்னால் கடைசி 2 ஓவரில் சொபிக்க முடியவில்லை“ என்று கூறியுள்ளார்.

Related posts: