நான் வந்துட்டேன்னு சொல்லு..! மெஸ்சியின் அதிரடியால் அர்ஜென்டினா வெற்றி!

Sunday, September 4th, 2016

2018ம் ஆண்டு உலகக்கிண்ண தொடர் ரஷ்யாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாடும் அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும்.

இதன்படி தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் தற்போது தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று போட்டிகளில் 10 அணிகள் விளையாடி வருகிறது.இந்நிலையில் ஒரு தகுதி சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா, உருகுவே அணியுடன் மோதியது. சொந்த மண்ணில் ஆடிய அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.

கடந்த யூன் மாதம் யூரோ கிண்ண இறுதிப் போட்டியில் தோற்ற பிறகு அர்ஜென்டினா அணியின் தலைவர் லயோனல் மெஸ்சி திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க இரு தனது ஓய்வு முடிவை கைவிட்டார்.

அவரே இந்தப் போட்டியில் வெற்றிக்கான கோலையும் (43வது நிமிடம்) அடித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினா 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது. பிரேசில் 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: