நான் மட்டும் தலைவராக இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டேன்: கங்குலி

Monday, April 4th, 2016

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அரையிறுதியில் டோனியின் செயல்பாட்டை முன்னாள் அணித்தலைவர் கங்குலி விமர்சித்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 2 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது.

இதன் பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர்களை இந்திய பந்துவீச்சாளர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அணித்தலைவர் டோனி அனைத்து பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தி பார்த்தும் பலனில்லை.

அஸ்வினுக்கு 2 ஓவர்கள் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், டோனி விராட் கோஹ்லியை பந்துவீச அழைத்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தொடக்க வீரர் சார்லஸ் அவரது ‘அவுட்’ ஆனார்.

இந்நிலையில் கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் டோனி கோஹ்லிக்கே வாய்ப்பு கொடுத்தார்.

அந்த ஓவரின் 3, 4 பந்தை பவுண்டரி, சிக்சர் என விளாசிய ரஸல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

இது பற்றி முன்னாள் அணித்தலைவர் கங்குலி கூறுகையில், ”ஏசி அறையில் இருந்து கொண்டு என்னவேண்டுமானாலும் பேசலாம்.

ஆனால் ஆடுகளத்தில் கடினமானது. நான் டோனியாக இருந்திருந்தால் கடைசி ஓவரை கோஹ்லி வீசி இருக்க மாட்டார்.

19வது மற்றும் 20வது ஓவர் என்பது முக்கியமான ஒன்று. அதை அணியில் உள்ள அனுபவ வீரர்களே வீச வேண்டும்” என்று கூறியுள்ளார்

Related posts: