நான் கெட்டவனா? ஊடகங்களை வறுத்தெடுத்த பிரபல வீரர்!

Tuesday, August 8th, 2017

தடகள வீரர் ஜஸ்டின் காட்லின் ஊடகங்கள் தன்னை கெட்டவனாக சித்தரிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஐஏஏஎஃப் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட்டை ஜஸ்டின் காட்லின் தோற்கடித்தார்.இந்நிலையில், கெட்டவனாக காட்டிக் கொள்வதில் உங்களுக்கு பெருமையா என நிரூபர்கள் காட்லினிடம் கேள்வி கேட்டார்கள்.

அதற்கு பதிலளித்த அவர், உசைன் போல்ட்டை ஹீரோவாக சித்தரிக்க, ஊடகங்கள் தன்னை கெட்டவனாக காட்டுவதாக கூறினார்.

மேலும், நான் யாரைப் பற்றியாவது கெடுதலாக ஏதாவது சொன்னேனா? அல்லது எனது உடல் செய்கைகள் அசைவுகள் மோசமாக உள்ளதா? நான் அடுத்தவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.இவையெல்லாம் நான் கெட்டவனாக எனக்கு என்னை உணர்த்தவில்லை என கூறியுள்ளார்.

ஊக்க மருத்து சோதனையில் இரு முறை சிக்கிய காட்லின், போல்ட்டை வீழ்த்தியதையடுத்து ரசிகர்கள் அவரை கேலி செய்யும் விதமாக கூக்குரல்களை எழுப்பினார்கள்.

இது குறித்து காட்லின் கூறுகையில், நான் அதைப் புரிந்து கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.2010 முதல் 2015 வரை என்னை கேலி செய்யும் விதமாக ரசிகர்கள் குரல் எழுப்பவில்லை, இது ஒன்றும் கசப்பான பகைமை அல்ல என காட்லின் கூறியுள்ளார்.ஊக்குவிக்கும் ரசிகர்களின் ஆரவாரத்தை விட கேலி செய்யும் ஆரவாரங்கள் அதிகமாக இருப்பது தனக்கு வருத்தம் எனவும் காட்லின் தெரிவித்துள்ளார்.

Related posts: