நான் அழிவற்றவன்: உசேன் போல்ட் !

Tuesday, August 16th, 2016

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜமைக்கா வீரரான உசைன் போல்ட் தான் ஒரு அழிவற்றவன் என ஆவேசமாக கூறியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான தடகள போட்டியில் 100 மீற்றர் ஓட்ட பந்தையத்தில் ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட பந்தைய தூரத்தை 9.81 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று அசத்தினர். இது குறித்து போல்ட் கூறியதாவது, இது ஒரு அற்புதமான நாள், நான் போட்டியில் வேகமாக செயல்படவில்லை சிந்தித்து செயல்பட்டேன் அதனால் வெற்றி அடைந்தேன். என்னுடைய வெற்றி தொடரும்.

மேலும் ரியோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்னர் உசைபோல்ட் காயங்களால் அவதி பட்டு ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அமெரிக்காவின் மற்றோரு ஓட்டப்பந்தைய வீரரான Justin Gatlin, போல்ட் ஒலிம்பிக்கிற்கு வரமாட்டார். அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைப்பு தராது என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் போல்ட் பதக்கத்தை கையில் வைத்துக்கொண்டு தான் ஒரு அழிவற்றவன், இன்னும் இரண்டு பதக்கங்கள் ரியோ ஒலிம்பிக்கில் உள்ளன. கடந்த முறையை விட இந்த முறை தான் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன். நான் ரியோ ஒலிம்பிக் அரங்கத்திற்குள் வந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் பூம் என்று குரல் எழுப்பியது தனக்கு ஆச்சரியமாக இருந்தது என பூரிப்புடன் கூறினார்.

Related posts: