நாணய சுழற்சியின் போது முரளி கார்த்திக் செய்த தவறு!
Friday, September 8th, 2017
இலங்கையுடன் இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அன்றி இலங்கை அணியே வெற்றிப் பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் வர்ணனையாளர் முரளி கார்த்திக்கால் இந்த நாணய சுழற்சி மேற்கொள்ளப்பட்டது.இதன் போது , உபுல் தரங்க நாயணத்தை பெற்று மேல் எறிந்த நிலையில் , விராட் கோஹ்லி ‘ஹெட்’ என கோரினார்.
பின்னர் , போட்டி தீர்மானிப்பாளரான ஹேன்ட் பிக்ரொப்ட் ‘டெய்ல்ஸ்’ என அறிவித்து உபுல் தரங்கவை நோக்கி கையை காட்டினார்.எனினும் , மீண்டும் அவர் எதையோ கூற முயற்சித்த போதும் , வர்ணனையாளரான முரளி கார்த்திக் ‘இட் இஸ் ஹெட்’ என அறிவித்து கோஹ்லி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
முரளி கார்த்திக் இதன்போது கவனம் இல்லாமல் செயற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் , போட்டி தீர்மானிப்பாளர் கூற வந்த விடயம் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்த வில்லை. இதனை தொடர்ந்து விராட் கோஹ்லி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்திருந்தார். எவ்வாறாயினும் , இந்த போட்டியில் இந்தியா அணி 7 விக்கட்டுக்களால் இலங்கையை வீழ்த்தி வெற்றிப்பெற்றிருந்து.
இருபதுக்கு இருபது போட்டிகளின் போது நாணய சுழற்சியின் வெற்றியானது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமையும் என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Related posts:
|
|