நாணயத்தாள் தடையின் எதிரொலி: போட்டியை பார்வையிட அனுமதி இலவசம்!

Thursday, November 17th, 2016

ரூபாய் நோட்டுகள் தடை அறிவிப்பு எதிரொலியால் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்க ஆந்திர கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த முடிவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் நிலையில், போட்டி முழுமைக்கும் இலவச அனுமதி அளிக்க இருப்பதாக ஆந்திர கிரிக்கெட் சங்க செயலாளரான கங்காராஜு தெரிவித்துள்ளார்.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் டிக்கெட் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், ஆந்திர கிரிக்கெட் சங்கத்தின் இந்த முடிவால் ரசிகர்கள் வருகை அதிகரிக்கும் என்று கங்காராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினம் மைதானத்துக்கு டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான அந்தஸ்து கிடைத்த பிறகு நடக்கும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது.

InAli-2_20102016_GPI

Related posts: