நாடு திரும்பினார் மாலிங்க!
Thursday, April 4th, 2019இலங்கை கிரிக்கட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள அனைத்து மாகாண கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. அதன்படி , இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.
தம்புள்ளை சர்வதேச விளையாட்டுத் திடலில் ஏஞ்சலோ மெத்திவ்ஸின் தலைமையிலான தம்புள்ளை அணியும் மற்றும் தினேஸ் சந்திமாலில் தலைமையிலான கொழும்பு அணியும் மோதுகின்றன.
அதேபோல் , பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெறும் மற்றுமொரு போட்டியில் திமுத் கருணாரத்ன தலைமையிலான கண்டி அணியும் மற்றும் லசித் மாலிங்கவின் தலைமையிலான காலி அணியும் மோதவுள்ளன.
இதேவேளை , நேற்று சென்னை அணியுடன் இடம்பெற்ற போட்டியை தொடர்ந்து அனைத்து மாகாண கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக லசித் மாலிங்க இன்று காலை இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது..
Related posts:
இந்தியாவை வென்றது நியூசிலாந்து!
மீண்டும் விஸ்வரூபமெடுத்த டோனி!
இந்தியாவின் சாதனையை பின்தள்ளி அவுஸ்திரேலியா புதிய சாதனை!
|
|