நாங்கள் யார் என்று உலகத்துக்கு காட்டுவோம்: இந்திய போட்டி குறித்து முஷ்பிகுர் ரஹிம்!

Monday, February 6th, 2017

நாங்கள் யார் என்பதை விரைவில் இந்திய டெஸ்டின் போது உலகத்துக்கு காட்டுவோம் என வங்கதேச அணியி்ன் அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்கதேச அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டி வரும் 9-ம் திகதி முதல் 13-ம் திகதி வரை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி குறித்து முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில், இந்தியா- வங்கதேச டெஸ்ட் போட்டியின் போது எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை உலக கிரிக்கெட்டுக்கு நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்.

குறித்த போட்டியில் செயல்படும் விதத்தை பார்த்து இந்தியாவே எங்களை அழைக்க விரும்புகிறோம்.என்னை பொறுத்தவரை இது டெஸ்ட் போட்டி அவ்வளவுதான், வரலாற்று சிறப்பு மிக்க போட்டி என்று நான் நம்பவில்லை. சமீபத்திய போட்டிகளில் ஏற்பட்ட அனுபவத்தை கொண்டு மிக சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது, அணியின் ஓட்டுமொத்த முயற்சிதான் நல்ல முடிவுகளை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

mushfiqur_2548573g

Related posts: