நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது சுவிஸ் மற்றும் பிரேசில்!

Thursday, June 28th, 2018

பிபா உலகக் கோப்பையில் இ பிரிவு ஆட்டத்தில் செர்பியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னாள் சாம்பியன் பிரேசில் முன்னேறியுள்ளது.
அத்துடன் இன்றைய ஆட்டத்தில் கோஸ்டாரிகாவுடன் 2-2 என டிரா செய்து நாக் அவுட் சுற்றுக்கு சுவிட்சர்லாந்தும் முன்னேறியுள்ளது.
21ஆவது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்துவருகின்றது. இதில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.
ஏ பிரிவில் இருந்து ரஷ்யா உருகுவே பி பிரிவில் இருந்து ஸ்பெயின் போர்ச்சுகல் சி பிரிவில் இருந்து பிரான்ஸ் டென்மார்க் டி பிரிவில் இருந்து குரேஷியா அர்ஜென்டினா எப் பிரிவில் இருந்து ஸ்வீடன் மெக்சிகோ ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம் இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
முதல் சுற்று லீக் ஆட்டங்கள் முடிகின்றன. இ பிரிவில் நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரேசில் செர்பியாவை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து கோஸ்டாரிகா மோதின.
இ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவை வென்றது. முன்னாள் உலக சாம்பியனான பிரேசிலுக்கு முதல் ஆட்டத்திலேயே ஷாக் கிடைத்தது. சுவிட்சர்லாந்து 1-1 என டிரா செய்தது. அதற்கடுத்து நடந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என கோஸ்டாரிகாவை வென்றது. சுவிட்சர்லாந்து 2-1 என செர்பியாவை வென்றது.
இந்த உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வீரர்களில் ஒருவரான பிரேசிலின் நெய்மர் முதல் ஆட்டத்தில் கோல் ஏதும் அடிக்கவில்லை. கோஸ்டாரிகாவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கோலடித்தார். இன்றைய ஆட்டத்தில் அவர் கோலடித்து வெற்றியைத் தேடித் தருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இ பிரிவில் பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. செர்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது. இன்று நடந்த செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தாலே பிரேசில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து கோஸ்டாரிகாவை சந்திக்கிறது.
அனைத்து உலகக் கோப்பையிலும் பங்கேற்றுள்ள அணி 5 முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமை பிரேசிலுக்கு உள்ளது. 1994ல் இருந்து குறைந்தபட்சம் கால் இறுதியில் பிரேசில் விளையாடியுள்ளது. இதில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக உள்ள பிரேசில் 2-0 என செர்பியாவை வென்றது. ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் பாலின்ஹோ முதல் கோலை அடித்தார். 68வது நிமிடத்தில் நெய்மர் கடத்தி வந்து உதவ தியாகோ சில்வா அணியின் 2-வது கோலை அடித்தார். இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு பிரேசில் நுழைந்தது.
சுவிட்சர்லாந்து 2-2 என கோஸ்டாரிகாவுடன் டிரா… நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது!
இ பிரிவில் பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. செர்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது. இன்று நடக்கும் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசிலும் கோஸ்டாரிகாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தும் டிரா செய்தாலே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.
இதுவரை 11 உலகக் கோப்பையில் விளையாடியுள்ள சுவிட்சர்லாந்து 1954ல் கடைசியாக கால் இறுதிக்கு முன்னேறியது. கோஸ்டாரிகாவுக்கு எதிரான ஆட்டத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் சுவிட்சர்லாந்து களமிறங்கியது.
முதல் ஆட்டத்தில் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்த சுவிட்சர்லாந்து 31வது நிமிடத்தில் பிலனிம் செமய்லி கோலடிக்க 1-0 என முன்னிலை பெற்றது. 56வது நிமிடத்தில் கோஸ்டாரிகாவின் கென்டல் வாஸ்டன் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். அசால்டாக விளையாடிய சுவிட்சர்லாந்து 88வது நிமிடத்தில் கோலடித்தது. ஜோசிப் டிர்மிக் கோலடித்தார். கடைசி நேரத்தில் சுவிட்சர்லாந்தின் சோம்னர் சேம் சைடு கோலடிக்க 2-2 என டிராவில் முடிந்தது. இதன் மூலம் சுவிட்சர்லாந்து நாக் அவுட் பிரிவுக்கு முன்னேறியது.

Related posts: