நவஜீவன்ஸ்சை வென்றது  குருநகர் பாடும்மீன்!

Monday, October 17th, 2016

வலிகாமம் லீக்கின் அனுமதியுடன் குப்பிளான் குறிஞ்சி குமரன் விளையாட்டுக்கழகம் நடத்தும் வடமாகாண ரீதியிலான அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான வடக்கின் வல்லரசன் உதைப்பந்தாட்ட தொடரில் லீக் சுற்றில் அண்மையில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் மற்றும் குருநகர் பாடும்மீன் அணிகள் மோதின.

ஆரம்பித்த 6ஆவது நிமிடத்திலேயே பாடும்மீன் சார்பாக கிறிஸ்ரன் முதல் கோலை போட்டார். தொடர்ந்து சாந்தன் 15ஆவது நிமிடத்திலும் மீண்டும் கிறிஸ்ரன் 21ஆவது நிமிடத்திலும் கோல்களைப் போட முற்பாதியில் 3:0 என பாடும்மீன் முதன்மை பெற்றது. தொடர்ந்து 28ஆவது நிமிடத்தில் கிறிஸ்ரன் மீண்டும் ஓர் கோலைப் பதிவு செய்தார். பதிலுக்கு கோல் போட முயற்சித்த நவஜீவன்ஸ் அணி சார்பாக 42,45 ஆவது நிமிடங்களில் இரு கோல்கள் பதிவாகின.

அதில் 42ஆவது நிமிடத்தில் பாடும்மீன் அணி சார்பாக ஓர் கோலை(ழுறுN புழுயுடு) நவஜீவன்ஸ் அணி பெற்றுக்கொண்டது. அத்தோடு 45ஆவது நிமிடத்தில் கௌதமன் ஒரு கோலைப் பெற்றுக்கொடுத்தார். எனினும் இறுதியில் பாடும்மீன் அணி 4:2 என்ற கணக்கில் வெற்றி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்டநாயகனாக கிறிஸ்ரன் தெரிவானார்.

15

Related posts: