நல்லூர் ரோட்டறி கழகம் இரண்டாமிடம்!

Tuesday, October 11th, 2016

கண்டி ரோட்டறி கழகம் நடத்திய ரி.ஆர்.ஆர்.ராஜன் ஞாபகார்த்த 14ஆவது கிரிக்கெட் போட்டியில் நல்லூர் ரோட்டறி கழகம் 2ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. 5 பந்துப்பரிமாற்றம் 6 பேர் கொண்ட இப்போட்டியின் இறுதிப்போட்டி கண்டி அஸ்கிரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அநுராதபுரம் ரோட்டறிகழகத்திற்கும் நல்லூர் ரோட்டறி கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அநுராதபுர அணி 5ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 76ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நல்லூர் அணி 5ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்று 2ஆம் இடத்தைப் பெற்றது. இப்போட்டியில் இலங்கையிலுள்ள 30 ரோட்டறி கழகங்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

 Untitled-1 copy

Related posts: