நடுவரைத் தள்ளினார் ரொனால்​டோ: ஐந்து போட்டிகளில் தடை!

Thursday, August 17th, 2017

பார்சிலோனா அணியுடனான ஆட்டத்தின் போது நடுவரைப் பிடித்து தள்ளியதால் ரியல் மட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் ஸ்பானீஸ் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா மற்றும் ரியல் மட்ரிட் அணிகள் மோதிய முக்கியமான போட்டி நேற்று (14) நடைபெற்றது.

இதில், 3-1 என்ற கணக்கில் ரியல் மட்ரிட் அணி வெற்றி பெற்றது. போட்டியின் போது ரியல் மட்ரிட் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கள நடுவரிடம் மஞ்சள் அட்டை பெற்றார்.இரண்டாவது பாதி ஆட்டத்தில் ரொனால்டோ கோல் அடித்ததும் தனது ஜெர்சியைக் கழற்றி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார்.

விதிமுறைகளின் படி இது தவறு என்பதால் கள நடுவரிடம் இரண்டாவது மஞ்சள் அட்டையை அவர் பெற்றார்.இரண்டு மஞ்சள் அட்டை என்பது சிவப்பு அட்டைக்கு சமம் என்பதால் அவரைக் களத்திலிருந்து வெளியேறுமாறு நடுவர் கூறினார்.

இதனால், நடுவருக்கும் ரொனால்டோவுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.இதன்போது, நடுவரை ரொனால்டோ பிடித்து தள்ளியதாகக் கூறப்படுகிறது.சிவப்பு அட்டை பெற்றதால் ஏற்கனவே அவரால் ஒரு போட்டியில் விளையாட முடியாத நிலையில், நடுவரைத் தள்ளிய விவகாரத்தில் மேலும் நான்கு போட்டிகளில் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த ஐந்து போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும், தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக அவரால் மேல் முறையீடு செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: