நடால் அதிர்ச்சித் தோல்வி!

பதின்னான்கு தடவைகள் கிரான்ட் ஸ்லாம் சம்பியனான ஸ்பெய்னின் ரஃபேல் நடால், உலகின் 31ஆம் நிலை வீரரான சேர்பியாவின் விக்டர் ட்ரோய்க்கியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.
மணிக்கட்டு காயம் காரணமாக, இரண்டைரை மாதங்களாக, போட்டிகளில் பங்கேற்காத நடால், இரண்டு மணித்தியாலங்கள் 34 நிமிடங்கள் இடம்பெற்ற போட்டியில், 6-3, 7-6(7-3) என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
இதனையடுத்து, கருத்துத் தெரிவித்த, தற்போது, தரவரிசையில் ஐந்தாமிடத்தில் உள்ள 30 வயதான நடால், தனது எதிராளிக்கு கஷ்டத்தை தான் ஏற்படுத்த வேண்டும் என்றும், அது தற்போது, அடிக்கடி நடைபெறுவதில்லை என்று கூறியுள்ளார்.
இதேவேளை, உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே, 6-3, 6-2 என்ற செட் கணக்கில், ஐக்கிய அமெரிக்காவின் ஸ்டீவ் ஜோன்சனை வீழ்த்தினார்.
இது தவிர, உலகின் மூன்றாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்கா, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், பிரித்தானியாவின் கைல் எட்முண்டை வீழ்த்தினார். உலகின் முதலாம் நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 6-4, 6-4 என்ற செட் கணக்கில், கனடாவின் வஸெக் பொப்ஸிலைத் தோற்கடித்தார்.
Related posts:
|
|