தோல்வி வலிக்கிறது: கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன் – இலங்கை ஜாம்பவான் அர்ஜூனா ரணதுங்கா வேதனை!

Thursday, September 27th, 2018

இலங்கை கிரிக்கெட் அணி மோசமாக தோல்வியடைவது வேதனையளிப்பதால் கிரிக்கெட் பார்ப்பதையே சில காலமாக நிறுத்திவிட்டேன் என அர்ஜூனா ரணதுங்கா கூறியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஆசிய கிண்ண தொடரில் இருந்து இலங்கை அணி தொடக்கத்திலேயே வெளியேறியது.

இதனால் தான் அந்த அணி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கை அணி உலகக்கிண்ணத்தை வென்ற போது அணித்தலைவராக இருந்த ரணதுங்கா இது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், இலங்கை அணியின் சமீபகால செயல்பாடுகள் வேதனை தருகிறது, சரியான வழிகாட்டுதல் இருந்தால் அணியின் பிரச்சனையை சரிசெய்து விடமுடியும் என நம்புகிறேன்.

இலங்கை மோசமாக தோற்பது வேதனையளிப்பதால் சில காலமாக கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்.

இப்போதும் ஒன்றும் தாமதம் ஏற்படவில்லை, நாம் சரியாக கவனம் செலுத்தினால், நல்ல வீரர்களை அடையாளம் கண்டு தற்போதைய நிலையிலிருந்து வெளியே வரலாம் என கூறியுள்ளார்.

Related posts: