தோல்வியை தவிர்க்க சிம்பாப்வே அணி போராட்டம்!
Wednesday, November 9th, 2016
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் சிம்பாப்வே அணி தேனீர் இடைவேளையின் போது 8 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்களை குவித்து போட்டியை வெற்றி -தோல்வியின்றி முடிப்பதற்கு அவ்வணி வீரர்கள் போராடி வருகின்றனர்.இப்போட்டி ஹராரே மைதானத்தில் ஆரம்பமானது.
அவ்வணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஷரி 80 ஓட்டங்களையும் ஏர்வின் 64 ஓட்டங்களையும் வோலர் 14 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க பின்னர் வில்லியம்ஸ் விக்கெட் காப்பாளர் மூர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
பந்து வீச்சில் இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டையும் லக்மால் ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.
இலங்கை அணி சகல விக்கெட்டையும் இழந்து 504 ஓட்டங்களை பெற்றது.அவ்வணி சார்பாக அஷேல குணரத்தின 116 ஓட்டங்களை பெற்று தனது கன்னி டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தமை விசேட அம்சமாகும்.
முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இன்று போட்டியின் 4 நாளாகும் இச் செய்தி அச்சுக்குப் போகும் வரையான தகவலே இவை.
Related posts:
|
|