தோல்வியை தவிர்க்குமா வங்கதேசம்!

Saturday, March 11th, 2017

நடைபெற்றுவரும் இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்கு வெற்றி இலக்காக, இலங்கை அணி 457 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 494 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 274 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

இலங்கை அணி சார்பில் உபுல் தரங்கா சதம் கடந்து 115 ஓட்டங்களும், சந்திமல் அரைசதம் கடந்து 50 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வங்கதேச அணி சார்பி இரண்டாவது இன்னிங்ஸில் மஹிதிஹாசன்மிராஜ் மற்றும் சகிப்அல்ஹசன் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து 457 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இன்னும் மீதம் ஒரு நாள் உள்ள நிலையில், இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் வங்கதேச அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றி பெற முயற்சி செய்வார்கள். அதே சமயம் வங்கதேச அணி தோல்வியை தவிர்ப்பதற்கு நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தும்.

Related posts: