தோல்வியின் பயமே தோல்விக்கு காரணம் – மஹேல!

Thursday, August 24th, 2017

தோல்வி மீதான பயமே இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மஹேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் தொடர் தோல்விக்கான காரணம் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் இணையத்தளமான கிரிக் இன் போ இணையத்தளம் , இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தனவிடம் நேர்காணல் ஒன்றை நடத்தியுள்ளது

ரங்கன ஹேரத் மற்றும் நுவன் பிரதீப் போன்று மேலும் சில பந்துவீச்சாளர்களை இனங்காண வேண்டும் என மஹேல ஜயவர்தன இந்த நேர்க்காணலின் போது குறிப்பிட்டிருந்தார்.இளம் வீரரான குசால் மென்தீஸ் இந்திய தொடரில் சிறப்பாக விளையாடியதாகவும் , அவருக்கு தேவையில்லாத அழுத்தங்களை பிரயோகிக்காமல் அவரின் திறமைகளை மேலும் மேலும் அதிகரித்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என மஹேல இதன் போது தெரிவித்திருந்தார்.மேலும், தற்போதைய நிலையில் , இலங்கை அணியின் நம்பிக்கை மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பதாக மஹேல ஜயவர்தன இதன்போது குறிப்பிட்டிருந்தார்

Related posts: