தோல்வியின் ஆத்திரத்தில் பேசிய ஹோல்டர்!

Wednesday, August 23rd, 2017

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி தோல்வியை அடுத்து, ஒவ்வொரு வீரரும் தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்று மேற்கிந்திய தீவு அணியின் தலைவர் ஜஸ்டின் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவு அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதும் முதல் டெஸ் போட்டி பகல், இரவு ஆட்டமாக நடந்தது.

இதில் பாலோ-ஆன் பெற்ற மேற்கிந்திய தீவு அணி, ஒரே நாளில் 19 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவு அணியின் தலைவர் ஹோல்டர் கூறுகையில், இந்த தோல்வி குறித்து நான் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.

ஒவ்வொரு மேற்கிந்திய தீவு வீரரும் அவர்களின் மூஞ்சியை அவர்களே கண்ணாடியில் பார்க்க வேண்டும். அப்போதாவது அவர்கள் செய்த தவறை திருக்கிக்கொள்வார்களா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Related posts: