தோல்விகளுக்கு சங்கா மகேலவின் ஓய்வை காரணம் காட்ட முடியாது- டில்ஷான்

Friday, March 11th, 2016

மூத்த வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோர்களின் ஓய்வையே எப்போதும் தோல்விக்கு காரணம் காட்ட முடியாது என்று டில்ஷான் கூறியுள்ளார்.

T-20 உலகக்கிண்ணத் தொடர் இந்தியாவில் களைகட்ட தொடங்கியுள்ளது. இதற்காக இலங்கை அணி இந்தியாவுக்கு பயணமாகியுள்ளது.

இந்நிலையில் உலகக்கிண்ண T-20 தொடர் குறித்து இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் கூறுகையில், ”எங்கள் அணியில் அதிக அளவில் இளம் வீரர்கள் உள்ளனர்.

சமீபத்திய தொடர்களின் இருந்து அவர்கள் அதிக அனுபவம் பெற்றிருப்பார்கள். முன்னாள் வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே அணியில் இல்லை என்று எப்போதும் நாம் காரணம் காட்ட முடியாது.

அனுபவ வீரர்களான சனத் ஜெயசூரியா, அரவிந்த டி சில்வா ஆகியோர் அணியில் இருந்து ஓய்வு பெற்ற போதும் நாங்கள் அணியை சிறப்பான நிலைக்கு கொண்டு வந்தோம்.

எனவே ஓய்வு பெற்றவர்களை பற்றி பேசி ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. இளம் இலங்கை அணி தயாராக உள்ளது. அவர்கள் முழு பங்களிப்பையும் விரைவில் அணிக்கு அளிப்பார்கள் என்றும் நம்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 

 

Related posts: