தொல்லை செய்யாதீர்கள் –  மஹேல ஜயவர்தன!

Friday, June 15th, 2018

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருக்க தெரிவு குழு விடுத்த கோரிக்கையை முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார்.

முன்னர் தாம் அளித்த பரிந்துரைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் தமக்கு அந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை எனவும் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோபூர்வ டுவிட்டர் பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

தெரிவுக் குழு மீதும் விளையாட்டுத்துறை அமைச்சர் மீதும் கொண்ட மரியாதை நிமித்தம் ஓராண்டு தெரிவு குழுவிலும் 6 மாதங்கள் சிறப்பு ஆலோசனை குழுவிலும் பணியாற்றியுள்ளேன்.

ஆனால் இதுவரை எந்த பரிந்துரைகளையும் செயல்படுத்தவில்லை என அவர் தமது நிலையை சுட்டிக்காட்டியுள்ளார். இனிமேலும் வீணாக எங்களை தொல்லை செய்ய வேண்டாம் எனவும் மஹேல கேட்டுக்கொண்டுள்ளார்

Related posts: