தொடர் தோல்வி – ஜயசூரிய இராஜினாமா!

Wednesday, August 30th, 2017

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர் .

பதவி விலகல் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் இன்று பகல் இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி அண்மை காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில், பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளது. இந்நிலையிலேயே, தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

Related posts: