தொடர் தோல்விக்கு இதுதான் காரணம் – மலிங்கா!

Tuesday, September 19th, 2017

இலங்கை அணியின் தொடர் தோல்விக்கான காரணம் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு பேசிய மலிங்கா, விளையாடுவதற்கு புற்களுடன் கூடிய ஆடுகளத்தை கோரிய போது புற்கள் வெட்டப்பட்ட ஆடுகளமே தரப்படுகிறது.இதுதொடர்பில் பிரச்சனை எழுப்பிய போது, தவறான பிளேடு பயன்படுத்தி புற்களை வெட்டியதாக விளக்கமளிக்கப்பட்டது, இதுபோன்று பல முறை நடந்துள்ளது.விளையாடுவதற்கு அவசியமான வசதிகள் கிடைக்காதது தொடர்பில் வீரர்கள் நம்பிக்கை இழப்பதாக கூறியுள்ளார்.மேலும், அனுபவம் உள்ள வீரர்கள் இருந்திருந்தால் அணி பலமாக இருந்திருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts: