தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்த சென் ஜோன்ஸ் கல்லூரி!

Monday, March 19th, 2018

சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான 16 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டி சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

இன்றையை போட்டியில் சகல துறைகளிலும் சோபித்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 66 ஓட்டங்களினால் இலகுவான வெற்றியை பதிவு செய்தது.

விறுவிறுப்பிற்கு குறைவில்லாது கடந்த வாரம் இடம்பெற்ற 112 ஆவது வடக்கின் பெரும் சமரில் யாழ் மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் த்ரில் வெற்றி ஒன்றினை பதிவு செய்து சென் ஜோன்ஸ் கல்லூரி அணியிடமிருந்து கிண்ணத்தை மீட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் யதுசன் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன் அடிப்படையில் பெரும் சமரில் விளையாடிய அதே அணியுடன் மத்திய கல்லூரி அணியும்இ 2 மாற்றங்களுடன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியும் களம் இறங்கியது.

சானுஷன் மற்றும் எல்ஷான் ஆகியோருக்கு பதிலாக முறையே ரதுசன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் அணிக்குள் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் நுழைந்த சௌமியன் மற்றும் ஷெரோபன் இணைந்து 41 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை ஷெரோபன் (11) இயலரசனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மீண்டும் இயலரசன் தனது அடுத்த ஓவரிலேயே சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சௌமியனை (23) ஆட்டமிழப்பு செய்தார்.

3 ஆவது விக்கெட்டிற்காக சுபீட்ஷன் அபினேஷ் இணைந்து 72 ஓட்டங்களை பகிர்ந்திருந்த வேளைஇ சுபீட்ஷன் 28 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

5 ஆம் இலக்கத்தில் மைதானம் விரைந்த ஜதுசன் தசோபனின் பந்தில் டுடீறு முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

மறுமுனையில் நிதானமாக துடுப்பாடி அரைச்சதம் கடந்திருந்த அபினாஷ் அதிரடி காட்டத் தொடங்கினார்.

தொடரில் முதலாவது சதத்தினை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் 5 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 84 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த வீரர்களை சுஜன் மற்றும் மதுசன் ஜோடி வரிசையாக ஆடுகளம் விட்டு வெளியேற்ற வெறுமனே 30 ஓட்டங்களுக்குள் இறுதி 5 விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.

மறுபக்கம் டினோசன் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்திலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக 47 .5 ஓவர்களில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது 233 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

யாழ் மத்திய கல்லூரி சார்பாக பந்துவீச்சில் சுஜன் 3 விக்கெட்டுகளையும்இ மதுசன்இ இயலரசன் மற்றும் தசோபன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் 234 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய யாழ் மத்திய கல்லூரிஇ

முதலாவது விக்கெட்டிற்காக இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்பிக் கொண்டிருந்த வேளையில் டினோசனின் பந்தில் வியாஸ்காந்த் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜெயதர்சனை 19 ஓட்டங்களுடன் யதுசன் ஆட்டமிழக்க செய்தார்.

தொடர்ந்து வந்த நிஷன் ஏமாற்றிய போதும் மதுசன் தனது அதிரடி ஆட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

பகுதி நேர பந்து வீச்சாளரான சௌமியனின் பந்தில் எல்லைக் கோட்டில் ஷெரோபன் சிறப்பாக பிடியெடுப்பு ஒன்றை மேற்கொள்ள 21 பந்துகளில் 24 ஓட்டங்களுடன் மதுசனின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

24 ஓட்டங்களுடன் தசோபனை டினோசன் LBW முறையில் வெளியேற்ற நெடுநேரம் களத்திலிருந்து 67 பந்துகளில் 25 ஓட்டங்களை சேகரித்திருந்த இயலரசனை கபில்ராஜ் வெளியேற்றினார்.

139 ஓட்ட்ங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்திருந்த யாழ் மத்திய கல்லூரி அணிக்கு 7 ஆம் இலக்கத்தில் நுழைந்து இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்ப கௌதமன் முயற்சித்த வேளையில்இ மறுமுனையில் ராஜகிளின்டன் ரன் அவுட் செய்யப்பட போட்டி முழுமையாக சென் ஜோன்சின் பக்கம் சென்றது.

சிறப்பாக துடுப்பாடிக் கொண்டிருந்த கௌதமன் 24 ஓட்டங்களுடன் சௌமியனின் இரண்டாவது விக்கெட்டாக ஆடுகளம் விட்டு வெளியேறினார்.

அதே ஓவேரிலேயே சௌமியன் டிலேசியனையும் மைதானம் விட்டு வெளியேற்றினார்.

இறுதி விக்கெட்டிற்காக தடுப்பாட்டத்தை மேற்கொண்டிருந்த சுஜன் துஷாந்தன் ஜோடியினால் சென் ஜோன்ஸ் கல்லூரியின் வெற்றியை 3 ஓவ்ர்கள் மட்டுமே பிற்போட முடிந்தது.

இறுதியாக யாழ் மத்திய கல்லூரி அணி 42 .4 ஓவர்களில் தமது சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள

66 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இரு கல்லூரிகளுக்கும் இடையிலான பெரும் சமரில் தொடர்ச்சியாக 3 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.

பந்து வீச்சில் சௌமியன் 3 விக்கெட்டுக்களையும் அபினாஷ் மற்றும் டினோசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

ஜதுசன் மற்றும் கபில்ராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.

அபினாஷ் பெற்றுக் கொண்ட 84 ஓட்டங்கள் தொடரில் சென் ஜோன்ஸ் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டமாக பதியப்பட்டுள்ள அதேவேளை மொத்தமாக 3 ஆவது அதிகூடிய ஓட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மேர்பின் அபினாஷ் பெற்றுக்கொண்டார்.

Related posts: