தொடர்கின்றது சங்கக்காராவின் அதிரடி: டாக்கா அணி மீண்டும் வெற்றி!

வங்கதேச பிரிமியர் லீக் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா விளையாடி வரும் டாக்கா டைனமிட்ஸ் அணி 78 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேச பிரிமியர் லீக் போட்டியில் நேற்றுமுன்தினம் நடந்த 9வது லீக் ஆட்டத்தில் டாக்கா டைனமிட்ஸ்- ரான்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதியது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய டாக்கா டைனமிட்ஸ் அணி 6 விக்கெட்டுக்கு 170 ஓட்டங்கள் எடுத்தது. இதில் மொசடிக் ஹொசன் 48 ஓட்டங்கள், நசீர் ஹொசன் 38 ஓட்டங்கள், சங்கக்காரா 29 ஓட்டங்கள் எடுத்தனர்.
இதன் பின்னர் 171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ரான்க்பூர் ரைடர்ஸ் அணி திணற ஆரம்பித்தது.தொடர்ந்து தடுமாறி வந்த அந்த அணி 19.2 ஓவரில் 92 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் டாக்கா அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாக்கா அணி சார்பில், வெய்ன் பிராவோ, சாகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
Related posts:
|
|